×

‘தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் 16 சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துவிட்டன’!: மலேசியா பரபரப்பு குற்றச்சாட்டு..!!

கோலா லம்பூர்: தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக மலேசியா குற்றம்சாட்டியிருக்கிறது. சீனாவின் போர் விமானங்கள் மலேசியா ஆலுவைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுருவியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உருவாகியுள்ளது. தெற்கு சீன கடற்பகுதியில் அமைந்துள்ள மலேசியாவின் வான் எல்லைக்குள் கடந்த மே 31ம் தேதி சீன விமானப்படைக்கு சொந்தமான 16 விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. இதையடுத்து மலேசிய விமானப்படையின் போர் விமானங்கள், சீன விமானங்களின் நடமாட்டம் தென்பட்ட பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 
மலேசிய விமானங்கள் வருவதை அறிந்து சீன படையினர் அங்கிருந்து விலகி சென்றுவிட்டதாக மலேசியா அரசு குற்றம்சாட்டியிருக்கிறது. தொடர்ந்து, தங்கள் வான்வெளியில் சீன போர் விமானங்களின் அத்துமீறல் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்திடம்  மலேசியா புகார் அளித்துள்ளது. ஆனால் தங்கள் விமானங்கள் மலேசிய வான் எல்லைக்குள் நுழையவே இல்லை என்று தெரிவித்துள்ள சீனா, சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டே தங்கள் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக பதில் அளித்துள்ளது. தென் சீன கடற்பகுதியில் ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நாடுகள் தொடர்ந்து சீனா மீது அத்துமீறல் குற்றசாட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

The post ‘தங்கள் நாட்டு வான் எல்லைக்குள் 16 சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துவிட்டன’!: மலேசியா பரபரப்பு குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Kola Lampur ,China ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...